தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.?
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் பல்வேறு இடங்களில் நீடித்து கொண்டு இருக்கிறது. உதவிக்காகவும், மீப்பு பணிகளுக்காகவும், உணவுக்காவும் இன்னும் மக்கள் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. அவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் தனி தீவில் சிக்கியவர்களை போல் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்ப பணிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை அறிவித்தார். தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் களத்தில் மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
4 மாவட்ட வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
இன்று, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக அரசு 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து , மீட்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . இது தொடர்பாக இன்று செய்தி குறிப்பை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி,
டி.கார்த்திகேயன் IAS – மாப்பிள்ளையூரணி ஊராட்சி – தூத்துக்குடி மாநகராட்சி,
தரேஸ் அகமது IAS – ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி.
ஆல்பி ஜாண் வர்க்கீஸ் IAS – மேல மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு.
பொன்னையா IAS – கருங்குளம் ஊராட்சி ஒன்றியம். – ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி.
தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் IAS – ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கிரண் குராலா IAS – வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு.
சிவராசு IAS – திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம்.
பிரகாஷ் IAS – வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால். மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி.
ஆகிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளை மேற்பார்வையிட கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர்IAS அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல், சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புணரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.