அசத்தல்…இனி இவர்களுக்கும் பணி;4 மணி நேர வேலை;முழு ஊதியம் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,வேலை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வேலைக்கான ஊதியம் குறிப்பிட்டுள்ள 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
மேலும்,இதற்கான விண்ணப்பத்தினை ஊராட்சி செயலர்,ஊராட்சி மன்றத்தலைவர்,வட்டார வளர்ச்சி அலுவலர் இதில் எவரேனும் ஒருவரிடம் வழங்கலாம்.இவ்வேலை அட்டையினை வழங்க எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி கோரும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டு வருகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.