இன்று இந்தியா முழுவதும் 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கோடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றினார்.
பின்னர், ஒவ்வோர் துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சியாக முதலிடத்தில் தருமபுரியும், இரண்டாவதாக வேதாரண்யம் நகராட்சியும், மூன்றாவதாக அறந்தாங்கி நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக, சிறந்த பேரூராட்சியில் முதலிடதிற்க்கான விருது மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டிக்கும், இரண்டாவதாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கும், மூன்றாவது இடத்தினை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேரூராட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
சிறந்த நல் ஆளுமைக்கான விருது தமிழக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கும், அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த துணிவு சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மாநில இளைஞர்களுக்கான விருது ஆண்கள் பிரிவில், நவீன் குமார் ( நாமக்கல்), ஆனந்த் குமார் ( திண்டுக்கல்), ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் கலைவாணி மதுரையை சேர்ந்த பெண்ணிற்கும் வழங்கப்பட்டது.
திருடர்களை விரட்டி அடித்த திருநெல்வேலியை சேர்ந்த வீரத்தம்பதி சண்முகவேலு மற்றும் செந்தாமரை ஆகியோருக்கு அதிவீரதீர செயல்கள் புரிந்ததாக துணிவுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…