ஸ்டெர்லைட் எங்களுக்கு தேவையில்லை.! தமிழக அரசு திட்டவட்டம் .!

Sterlite Case in Supreme court of India

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசுபடுகிறது, அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கூறி எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற போது, ஆலை செயல்பட வேண்டுமா வேண்டாமா என்பதை ஆய்வு செய்ய ஒரு சுற்றுசூழல் குழுவை நிர்ணயம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது.  அதற்கு மறுப்பு தெரிவித்து, ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நீதிமன்ற மாசு கட்டுப்பாடு உத்தரவுகளை கூட ஸ்டெர்லைட் மீறி 100 கோடி ரூபாய் வரையில் அபராதம் செலுத்தி உள்ளது என கூறி தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!

இதனை தொடர்ந்து நேற்றும் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. மீண்டும் அதே வாதத்தை ஸ்டெர்லைட் ஆலையும், தமிழக அரசு வலியறுத்தின. இதில் பொதுவான ஆய்வு குழு அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதில் கருத்து கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு , ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதேபோல, தமிழக அரசின் வாதத்தை புறந்தள்ளிவிட முடியாது என கூறியது.

இதனை தொடர்ந்து மீண்டும் விசாரணைக்கு வருகையில், தமிழக அரசு சார்பில், வாதிடுகையில், தமிழகம் ஒன்றும் குப்பை கிடங்கு அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தூத்துக்குடி பொருத்தமான இடமில்லை. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து தூத்துக்குடியில் இயங்க அனுமதித்தால் மீண்டும் மீட்க முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சீல் வைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலை என்பது எங்களுக்கு தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்