நடப்பு 2021 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணி தொடர்பாக தமிழக அரசு, தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தில் கணக்கெடுப்பு, ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பு முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது. அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புபணி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கையை கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.அதில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியீட்டுள்ளது. இதை மத்திய அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் வௌியிட்ட அறிவிப்பையொட்டி, தமிழக அரசு தற்போது இந்த அறிவிப்பை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…