விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!
Vilavancode: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, சமீபத்தில் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!
விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், விஜயதரணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலாளருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார்.
Read More – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது.! 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு.!
இதையடுத்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தையும் சட்டப்பேரவை தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். இதனால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
Read More – பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக இருக்கலாம்..! அமைச்சர் உதயநிதி.
இந்த நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ம் தேதியில் இருந்து காலியானதாக தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
எனவே, காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற மக்களவை தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.