Unlock 4: தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.