டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ரவி.! முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு.!

Tamilnadu Governor RN Ravi meets PM Modi and Union minister Amit shah

டெல்லி: தமிழகத்தில் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம், அதே போல சென்னையில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மாநில ஆளுனரிடத்தில் பாஜக , அதிமுக கட்சியினர் கோரிக்கை வைத்து இருந்தனர். மேலும் தமிழக சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி , அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு உள்ளிட்ட நிலவரங்கள் குறித்தும், மற்ற விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

நேற்று பிரதமர் மோடியை ஆளுனர் ரவி சந்தித்த பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, தமிழக மக்களின் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என பதிவிட்டு இருந்தார்.

பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்த பிறகு தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், இந்த சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறுபான்மையினர் மீது அவர் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்து இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த பின்னர் சமூக வலைதள பக்கத்தில் ஆளுநர் ரவி பதிவிடுகையில், தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் பற்றி இந்த சந்திப்பில் விவாதித்தேன். கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் முன்னேற்றம் காண என்னும் அவரது அக்கறை கொண்ட எண்ணங்களக்கு மிகவும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அதேபோல இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு ஆளுநர் ரவி குறிப்பிடுகையில், தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, மற்றும் சட்ட ஒழுங்கு சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் உள்ள  தாக்கங்கள் குறித்து ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது.”  என ஆளுநர் ஆர்.என்.ரவி அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested