1000 ரூபாய் உதவித்தொகை வேண்டாம் என்றால் உடனே அரசுக்கு தெரிவிக்கலாம்.!

இந்தியா முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஓவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் உதவி தொகை மற்றும் , விலையில்லா அத்தியாவசிய பொருட்களையும் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் உதவி தொகையையும், விலையில்லா பொருட்களையும் வாங்க விருப்பமில்லாதவர்கள் தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதனை tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ, அல்லது tnepds. என்கிற செயலியிலோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த முறை ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025