ஜனவரி 12ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் – தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ம் தேதி நியாயவிலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பணி நாளை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் விடுமுறை வழங்கி அறிவிப்பு வெளியிடப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ஜனவரி 10ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அறிவித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை முதல் ஜனவரி 9ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பல்சர் பைக் பரிசு!
அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை பெற்று கொள்ளலாம். இதையடுத்து, ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி, ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த நாட்களில் பெற முடியாதவர்கள், ஜனவரி 14ம் தேதி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதற்கு ஏதுவாக ஜன. 12ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.