#Breaking:சற்று முன்…இந்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 – அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!
10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு.
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்தார்.அப்போது,மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மாதம் ரூ.1000:
இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.
பாலிடெக்னிக்,ஐடிஐ மாணவிகள்:
இந்நிலையில்,10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனவும்,அவர்களுக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் பொருந்தும் என்றும் சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.