சென்னை : தமிழகத்தில் உள்ள 4 ஆறுகள் மட்டுமே மிகவும் மாசடைந்த ஆறுகள் பட்டியலில் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் பிரிவு அறிவித்துள்ளது.
சமூக வலைதள பக்கங்களில் பரவும் தவறான தகவல்களைக் கண்டறிந்து அதனைத் தெளிவுபடுத்தும் விதமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உண்மை கண்டறியும் பிரிவு (TN Fact Check) சமீபகாலமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவானது இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தைக் குறிப்பிட்டு பொய்யான தகவல் என விளக்கம் குறிப்பிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நிகழ்வில் பேசுகையில், ” மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுக்க 311 ஆறுகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த குழுவால் தமிழகத்திலிருந்து பவானி, காவேரி, பாலாறு, தாமிரபரணி, சர்பங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்டா உள்ளிட்ட 7 ஆறுகள் இடம்பெற்றன. மிகவும் மாசடைந்த ஆறுகளின் பட்டியலில் 4 ஆறுகள் இடம் பெற்றுள்ளன. அந்த 4 ஆறுகளுமே தமிழகத்தில் உள்ள ஆறுகள்.” என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோவை குறிப்பிட்டு தமிழக அரசின் உண்மை கண்டறியும் பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட இந்தியாவில் மாசடைந்த 311 ஆறுகள் பட்டியலில் மிகவும் மாசடைந்த ஆறுகள் பட்டியலில் உள்ள 4 ஆறுகளும் தமிழ்நாட்டில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.
Pollution River Steches for restoreation of Water Quality 2022 அறிக்கையில் இந்தியாவில் மாசடைந்த நிலையில் உள்ள 311 ஆறுகள் பட்டியலில் மிகவும் மாசடைந்த ஆறுகள் பிரிவில் மொத்தம் 46 ஆறுகள் உள்ளன. இதில் குஜராத்தில் 6 ஆறுகளும் உத்தரப்பிரதேசத்தில் 6 ஆறுகளும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 4 ஆறுகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் அதிக மாசடைந்த ஆறுகள் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 4 ஆறுகள் மட்டுமே இடம்பெற்று இருப்பதாக அண்ணாமலை கூறுவது பொய்யான தகவல் எனப் பதிவிட்டுள்ளது.
Pollution River Steches for restoreation of Water Quality 2022 அறிக்கையின்படி, இந்தியாவில் ஆய்வுக்கு மேற்கொள்ளப்பட்ட 311 ஆறுகளில் தமிழ்நாட்டிலிருந்து அடையாறு, அமராவதி, பவானி, காவேரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, திருமணிமுத்தாறு, வசிஸ்தா என 10 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன அதில் கூவம் ஆறு அதிக மாசடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து வசிஷ்தா , அடையாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகள் அதிக மாசடைந்த ஆறுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…