தூத்துக்குடியை அடுத்து மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்! அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…
மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பார்க் கட்டுவதற்கு, டைடல் பார்க் நிறுவனதிற்கு தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை : தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது. இதனை அடுத்து மற்ற ஊர்களிலும் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வண்ணம் டைடல் பார்க் திறக்கப்படும் என கூறப்பட்டது.
அதேபோல, மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான வேளைகளில் ஈடுபட தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுசூழல் அனுமதி கோரப்பட்டது.
திருச்சியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் புதிய டைடல் பார்க் அமைக்க 14.16 ஏக்கர் நிலம் கையகப்டுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.315 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் 9.97 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.289 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பார்க் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடனும், மதுரையில் தரைதளம் மற்றும் 12 தளங்களுடனும் ஐடி பார்க் கட்டுவதற்கு டைடல் பார்க் நிறுவனம் சுற்றுசூழல் அனுமதி கோரியது. அதற்கு தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அங்கு கட்டுமான பணிகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025