சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார்.
இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகவும்,அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேரத்திலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றிப் பெற்றால் அதைக் கொண்டாடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருப்பினும்,திமுக கட்சியினர் திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாகக் கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும்,கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கே.என்.நேரு,திருச்சி மேற்குத் தொகுதியில் 92 ஆயிரத்து 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…