ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்றது.
இந்நிலையில்,ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் தற்போது நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி,வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…