நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது.
மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிபுணர் குழுவினர், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், இணையம் வழியில், இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக, இணைய வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…