மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்…..
மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி வரும் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. 2.57 சதவீத காரணி ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின் வாரிய தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.
இந்த நிலையில் 5 பேர் கொண்ட மின் வாரிய நிதி நிலை அதிகாரிகள் குழு, அவசர அவசரமாக அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால், வரும் 16ஆம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.