#Breaking:நுழைவுத்தேர்வுக்கு எதிராக பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் இன்று தமிழக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு,பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025