கொரோனாவை விட கொடியது பாஜக அரசு..! மொழிப்போர் வீரவணக்க நாளில் முதல்வர் பேச்சு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜனவரி 25-ம் தேதியான இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசும் போது, ”பனிரெண்டு வயதாக இருக்கும் போது தமிழ்க்கொடியுடன் ஓடி வந்து.. பெண்ணே கேள்..! நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இது அல்லவே.. என இந்தி திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் நம் தலைவர் கருணாநிதி. அவர் போராட்ட வரலாற்றை நான் சொல்லி தான் நீங்கள் எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை.

அப்படிப்பட்ட நம் தமிழின தலைவர் கருணாநிதிக்கு மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று திருச்சி தெற்கில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி சிலை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில் சிலை இருந்தாலும் மொழிப்போர் தியாகிகள் நாளில் திறக்கப்பட்ட சிலை மேலும் அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கிறது.

இங்கு இந்தி மொழியை திணிக்க நினைத்தவர்களை எதிர்த்து, ”இருப்பது ஒரு உயிர்”.. அது நாட்டிற்காகவும், மொழிக்காகவும் போகட்டும் என்று தமிழ் காக்க உயிரையும் விலையாக கொடுத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்த நாள் ஆகும்..! மொழிப்போரில் பங்கேற்ற பெண்கள் தங்கள் கைக் குழந்தைகளை கூட கொண்டு வந்தார்கள்.
தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்.. அமைச்சர் சிவசங்கர்!

இன்று உலகம் முழுவதும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் வலம் வர இருமொழி கொள்கையே காரணம். கொரோனாவை விட கொடியது பாஜக அரசு.. இந்தி மக்களுக்கு அவர்கள் காட்டிய இரக்கம் என்ன? ராமர் கோவிலை காட்டி இந்தி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். வடமாநில மக்கள் இனியும் பாஜகவை நம்ப தயாராக இல்லை, இனி அந்த கட்சி அங்கு வெற்றி பெறாது.

பாஜகவின் தமிழ்மொழி விரோத போக்கை அம்பலப்படுத்துவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக எல்லா தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமுதாயத்தை உருவாக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதி எடுப்போம், வென்று காட்டுவோம்” என்றார்.

பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்த தனிப்படை.! 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்