#Breaking:பிரதமரே…இதனை தடுக்க நடவடிக்கை எடுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை:இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 105 மீன்பிடிப் படகுகளை,இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை ஏலம் விட அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும்,இலங்கை அரசின் இந்தச் செயலை உடனடியாக நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,”மீன்பிடித்தல் இந்திய-இலங்கை கூட்டுப் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் பணிக்குழுவானது தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிஷ்டவசமானது எனவும்,நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கை அரசால் 2018 ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர வேண்டும் என்றும்,இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிடவேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும்,
1/2 pic.twitter.com/zf5ml938GZ
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 25, 2022