“அன்புள்ள ராகுல் காந்திக்கு…நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்களின் சார்பாக நன்றி – முதல்வர் ஸ்டாலின்!
சென்னை:நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும்,நீட் தேர்வில் விலக்கு வேண்டும் எனத் தமிழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால்,அதனை மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது.எனினும்,தமிழகம் மனம் தளராமல் மீண்டும் நீட் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறது எனவும்,மேலும்,உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில்,நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள ராகுல் காந்திக்கு,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்து,நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களை பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. (2/2)
— M.K.Stalin (@mkstalin) February 3, 2022