அரசியலில் சம்பந்தமில்லாதவர்கள் பேச்சை பொருட்படுத்துவதில்லை! ரஜினி கருத்துக்கு முதல்வர் பதிலடி!
கடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பல கருத்துக்களை பேசினார். திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது போல என்மேலும் காவி சாயம் பூசைபர்கிறார்கள். நாங்கள் இருவருமே சிக்க மாட்டோம். எனவும், தமிழக அரசியலில் தற்போதும் வலிமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த கருத்து தமிழகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருகட்சியினர் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை பெற்றது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, ‘ தமிழக அரசியலில் காலி வெற்றிடம் இல்லை என அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தெரிந்து இருக்கும் எனவும், நாடாளுமன்ற கூட்டணி, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் எனவும் குரிப்பிட்டர்.
மேலும், ரஜினி கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டது., அப்போது, அரசியல் கட்சி ஆரம்பிக்காத அரசியலில் தொடர்பில்லாதவரின் கருத்தை பொருட்படுத்தப்போவதில்லை என தெரிவித்தார்.