சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! முதலமைச்சர் உடனடி உத்தரவு.! 

கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Guindy Govt hospital - Tamilnadu CM MK Stalin

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளியுடன் வந்த ஒருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், இதில் 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ”  கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். ” எனப்பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review