“அப்போது கலைஞர் – விஸ்வநாதன் ஆனந்த்., இப்போது குகேஷ்” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முன்னர் விஸ்வநாதன் ஆனந்த் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

TN CM MK Stalin - Grandmaster Gukesh

சென்னை : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசி உலக செஸ் சாம்பியன் குகேஷ், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தமிழக அரசு சார்பில் செஸ் போட்டிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை குறிப்பிட்டு புகழ்ந்து பேசினார்.

அதன் பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” நம்ம சென்னை பையன் குகேஷை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். சீன செஸ் சாம்பியனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் குகேஷ். அவரது பெற்றோரை போல நானும் இந்த நேரத்தில் மகிழிச்சியடைகிறேன். குகேஷ் கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன். விளையாட்டு குணத்தோடு மனஉறுதியுடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். நான் அவர் வெற்றிக்கு காரணமாக இன்னொரு விஷயத்தை பார்ப்பது, அவர் எப்போதும் புன்னகையுடன் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் அவரது குணமும் முக்கிய காரணம்.

7 வயதில் இருந்து செஸ் பயிற்சி பெற்று வருகிறார். 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். செஸ் பயிற்சி பெற ஆரம்பித்து 11 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். இந்த வெற்றி மூலம் குகேஷ் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வந்துள்ளார்.

இதற்கு முன்பு விசுவநாதன் ஆனந்த் தெற்காசிய அளவில் முதலிடம்,  2 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர்  ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார். இப்போது உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கழக அரசு பரிசுத்தொகை வழங்குகிறது. இவை இரண்டும்  திமுக அரசு சமயத்தில் நடைபெற்றது மகிழ்சி அளிக்கிறது.

நமது அரசின் கீழ், 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினோம். உலகம் முழுக்க பாராட்டினார்கள். உலக மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ் உலக கோப்பை, உலக அலைச்சறுக்கு லீக், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் என பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளோம்.

இதுவரை 56 செஸ் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, 3345 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, 12 ஆயிரம் கிராமங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், சென்னையில் பாக்சிங் அகாடமி என நிறைய திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக கொண்டுவந்துள்ளோம். இளைஞர்கள் விளையாட்டை வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்து கொள்கிறார்கள். மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. தமிழ்நாட்டை சிறந்தவிளையாட்டு மாநிலமாக கொண்டுவந்த விளையாட்டுத்துறையை கவனித்து கொள்ளும் துணை முதலமைமைச்சருக்கு எனது பாராட்டுக்கள். அவருக்கு துணையாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

இந்தியாவில் மொத்தம் 85 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் 31 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு சமயத்தில்  சதுரங்கத்தை இன்னும் மேம்படுத்த  ஹோம் ஆஃப் செஸ் எனும் சிறப்பு அகாடமியை தமிழக அரசு உருவாக்க உள்ளது. ” என குகேஷ் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் பிறகு முதலமைச்சர் முன்னதாக அறிவித்தபடி, ரூ.5 கோடிக்கான காசோலையை கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு அவர் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்