கொற்றலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள்.! ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகள் கட்ட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மாநகரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும், கொற்றலை ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது.
அதற்கான வேலைகளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட தொடங்கினார். கொற்றலை ஆறு ஓடும் பெரும் பரப்பளவில் சிறிய பகுதி மட்டுமே ஆந்திராவில் இருக்கிறது. ஆனால், பெரும்பகுதி, தமிழகத்தில் தான் இருக்கிறது.
மேலும், சித்தூரில் இரண்டு அணைகள் கட்டப்பட்டால், அது சென்னை குடிநீர் விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில் , ‘ கொற்றலை ஆற்றில் அணைகள் கட்டினால், தமிழக அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும், மேலும், அதனால், சென்னை குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆதலால் அந்த திட்டத்தை கைவிடுமாறும் அதில் குடிப்பிடப்பட்டுள்ளது.