கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! 10 லட்சம் பேர் பயன்பெறுவர்… முதல்வர் பேச்சு.!

Published by
மணிகண்டன்

சென்னையில் குடிநீர் தட்டுப்படை குறைக்க தமிழக அரசு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலி பகுதியில் இந்த திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டது. வடசென்னை மக்களின் குடிநீர் தட்டுப்படை குறைக்கும் இந்த திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நெம்மேலியில் நிறைவுபெற்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனுடன் மேலும் முடிவுற்ற 95 திட்டங்களையும் காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இன்று முதல்வர் தொடங்கி வைத்த நெம்மேலி கடல்நீர், குடிநீராக்கும் திட்டம் உட்பட மொத்தம் 2465 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இது போக 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Read More – எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..!

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசுகையில், நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் வடசென்னை பகுதி மக்கள் 10 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும், இதுவரை சென்னை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடும் நெருக்கடியில் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்பணிகளை பட்டியலிட  இந்த ஒரு நாள் போதாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago