கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! 10 லட்சம் பேர் பயன்பெறுவர்… முதல்வர் பேச்சு.!
சென்னையில் குடிநீர் தட்டுப்படை குறைக்க தமிழக அரசு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெம்மேலி பகுதியில் இந்த திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டது. வடசென்னை மக்களின் குடிநீர் தட்டுப்படை குறைக்கும் இந்த திட்டம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நெம்மேலியில் நிறைவுபெற்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனுடன் மேலும் முடிவுற்ற 95 திட்டங்களையும் காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இன்று முதல்வர் தொடங்கி வைத்த நெம்மேலி கடல்நீர், குடிநீராக்கும் திட்டம் உட்பட மொத்தம் 2465 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். இது போக 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Read More – எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..!
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசுகையில், நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் வடசென்னை பகுதி மக்கள் 10 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும், இதுவரை சென்னை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடும் நெருக்கடியில் ரூ.100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்பணிகளை பட்டியலிட இந்த ஒரு நாள் போதாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.