இப்போது தூங்கா நகரம்., அடுத்த டார்கெட் நெல்லை தான்.! முதலமைச்சர் அப்டேட்.!

Tamilnadu CM MK Stalin (12)

தொல்லியல் துறை : தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் துறை பணிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிடுகையில், திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் அறிவித்த தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் 16.92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

அதில், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ 3.73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன என்று திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,   தூங்காநகருக்கு (மதுரை) மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது. கண்களைக் கவரும் வண்ணம் உள்ளது.

சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும்! இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என மதுரை நாயக்கர் அரண்மனை பற்றியும், அடுத்ததாக திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகம் பற்றியும் முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk