நீட் தேர்வு முறைகேடுகள்… சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நாளில் நீட் தேர்வுக்கு எதிராக முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.
அதே, வேளையில், அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பையும் உருவாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், பல்வேறு தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு மைய கண்காணிப்பாளரே விடைத்தாள் நிரப்புவது உள்ளிட்ட புகார்கள் நீட் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதலில் இந்த குற்றசாட்டுகளை மறுத்த மத்திய அரசு, பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, போட்டித்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு மைய (NTA) தலைவர் மாற்றப்பட்டுள்ளார். பின்னர், நீதிமன்றம் தலையிட்டு இந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
நீட் தேர்வுக்கு எதிராக தனியாக தமிழ்நாடு குரல் எழுப்பி வந்த நிலையில், தற்போது அது இந்தியாவின் குரலாக மாறியுள்ளது. மாநில அரசுகளே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டுவர மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர் என குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் வாசிக்கையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவுகளை கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும்செயலை மத்திய அரசு நிறுத்த வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துதர வேண்டும் என தீர்மானம் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதன் பின்னர் முதல்வர் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025