‘யாதும் ஊரே’ திட்டத்தை அமெரிக்காவில் தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி
அமெரிக்காவில் முதலமைச்சர் பழனிசாமி யாதும் ஊரே’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.முதலாவதாக முதலமைச்சர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது முதலமைச்சர் அந்த பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இந்த நிலையில் முதலீடுகளை ஈர்க்கும் ‘யாதும் ஊரே’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.