வெளிமாநிலங்களுக்கு நடந்து செல்ல வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி
வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ பிற வாகனங்களிலும் மூலமாகவோ செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சமயத்தில் தான் வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைபார்க்கும் மாநிலங்களிலே தவித்தனர்.எனவே அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.இதனிடையே தொழிலார்கள் நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், படிப்படியாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாம் .நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதுவரை தற்போது தங்கி இருக்கும் முகாம்களிலே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயண செலவுகளை அரசே ஏற்று தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதால்,
வெளி மாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாமெனவும் அதுவரை முகாம்களிலேயே தங்கியிருக்கவும் கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/QF3yYe4GDW
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 16, 2020