வெளிநாட்டு பயணத்தின் போதும் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுக்காத தமிழக முதல்வர்!
ஒரு முதல்வர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது, தனது முதல்வர் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுத்து விட்டு செல்வது வழக்கம். 1968ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக்க இருந்த அண்ணாதுரை அவர்கள் தனது பொறுப்புகளை 4 அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
அதே போல, 1970இல், தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் வெளிநாட்டு பயணத்தின் போது மற்ற அமைச்சர்களிடம் தனது பொறுப்புகளை கொடுத்துவிட்டு சென்றார். 1978இல், தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களும் வெளிநாட்டு பயணத்தின் போது தனது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
ஆனால், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்ல உள்ளார். இந்த நாட்களில் தனது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் கொடுக்காமல், தானே கவனித்து கொள்வதாகவும், ஏதேனும் ஆவணங்கள் வேண்டுமென்றால் ஃபேக்ஸில் அனுப்பி விடும்படி தயார் நிலையில் செல்ல உள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ள்ளது.