மருத்துவ குழுவினருடன் இன்று தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மருத்துவ குழுவினருடன் மருத்துவ குழுவினருடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. நேற்று நிலவரபடி தமிழகத்தில் மொத்தமாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 635 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. இதுவரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 940 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் இன்று காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவானது ஏற்கனவே சிகிச்சை நெறிமுறைகளை, அதனை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆகிய ஆலோசனைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.