புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு.!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் எனும் கிராமத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார். அவர் கடந்த 1ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஊரணியில் சடலமாக மீட்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் குறிப்பிடுகையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மேலும், இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளியை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர விரைவாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாகவும்,  கூறிவிட்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உள்ளதாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்