ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை! இடைத்தேர்தல் கிடுக்கிப்பிடி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ( புதுச்சேரி ) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது என சட்ட விரோத செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, வருமான வரித்துறையினர் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாகியுள்ளது.
வேட்பாளர் சார்பில் பரிசு பொருட்களோ, பணமோ வழங்கப்பட்டால் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்கலாம்.
இலவச டோல் ஃப்ரீ – 1800 425 6669
இ-மெயில் – itcontrol@gov.in
போன் நம்பர் – 044 28271915
வாட்ஸாப் – 9445467707
இதில் எந்த வழி மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.