அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஏப்ரல் 11ஆம் (நாளை) தேதி விண்ணப்பம் அளிக்க கோரப்பட்டுள்ளது.

BJP State President Annamalai

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் உலா வந்தன. அதனை அண்ணாமலையும் மறைமுகமாக உறுதிப்படுத்தி வந்தார். தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.

அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை பாஜக கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாநில தலைவர் பதவி

மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,  மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் பாஜக அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள் என்றும், போட்டியிடும் நபரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

தேசிய பொதுக்குழு உறுப்பினர்

அதேபோல, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்றும் அதிக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு வாய்ப்பு இருக்கா?

தற்போது பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, இந்த பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அதன் பிறகு அதில் இருந்து விலகி 2020-ல் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்