இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்ட தொடர்! எத்தனை நாட்கள் நடைபெற உள்ளது என தெரியுமா?!
- இந்தாண்டின் முதல் தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் புத்தாண்டை அடுத்து இன்று முதல் தொடங்கியது.
- இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என சட்டசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2020 புத்தாண்டை அடுத்து இந்தாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். இந்த உரையை அடுத்து, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள்,டிடிவி.தினகரன், தமிமுன் அன்சாரி போன்றோர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி கொறடா துரைமுருகன் உள்ளியிட்டார்கள் கலந்துகொண்ட ஆய்வுக்குழுவில் ஆலோசனை நடத்தி வரும் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாழன் வரை இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்ட தொடர் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.