தமிழக பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை நடைபெறாமல் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 9ம் தேதி சட்டப்பேரவை கூடும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் எந்த மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதிக்க கடந்த 2 தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது.அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த திமுக பொதுச்செயலாளரும், 9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான க.அன்பழகன், மறைந்த திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இன்றைய கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். நாளை பேரவை கூட்டம் கிடையாது. பின் 11ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு மானியக்கோரிக்கையும் நடைபெறும். இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் சார்ந்த பல்வேறு பிரச்னையை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை கூடுவதையொட்டி தலைமை செயலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…