பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.! 

TN Speaker Appavu

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த பொருநை அருங்காட்சியகம் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில்,  பொருநை நாகரீகம் என்பது, பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன்பெரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.

பொருநை அருங்காட்சியகமானது, 33 கோடி செலவில் கட்டமைக்கப்பட உள்ளது. சிவகளையில் கிடைத்த பொருட்கள் தனி கட்டத்திலும், கொற்கைக்கு தனி கட்டடம் எனவும், ஆதிச்சநல்லூர் பகுதிக்கு தனி கட்டடமும் , நிர்வாகத்துக்கு தனி கட்டடம் என அமைக்கப்படவுள்ளது என்றும்,

இந்த அருங்காட்சியக வளாகத்தில் சிற்றுண்டிகள் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடம், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட  பொருட்களுக்கான விற்பனை இடம் என அமைக்கப்பட உள்ளது. 18 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைய உள்ளது.

மேலும், அருகாட்சியாக வளாகத்திற்கு நிறைய இடங்கள் உள்ளதால், கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். மேலும், பொருநை நாகரீகம் தான் இந்தியாவிலேயே முதலில் தோன்றிய நாகரீகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை குறிப்பிட்டார்.

இந்த தகவலை முதல்வர் குறிப்பேடுகளை பார்த்து கூறவில்லை என்றும், சிவகளையில் கிடைக்கப்பட்ட அந்தக்காலத்து மக்கள் பயன்படுத்திய தாலி, நெல் ஆகியவை கிடைக்கப்ட்டன. அதனை, அமெரிக்க ஃபுளோரிடா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு அந்த தாலியானது கிருஸ்து பிறப்பதற்கு முன்னர் 150 முன்பு மக்களால் பயன்படுத்தப்பட்டது என அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து கண்டறியப்பட்டு தான் இந்தியாவிலேயே முதலில் தோன்றிய நாகரீகம் பொருநை நாகரீகம் என குறிப்பிட்டு பேசினார் முதல்வர் என சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்