பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

தவறான தகவலை பரப்புவதால் இந்த உண்மை மாறிவிடாது என அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

anbil mahesh dharmendra pradhan

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அமர்வின் போது எம்பி கனிமொழியுடன் நடந்த காரசாரமான விவாதத்தின் போது தர்மேந்திர பிரதான் “முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள்” என பேசியிருந்தார்.

அதற்கு திமுக சார்பில் எம்பி கனிமொழி, மற்றும் முதல்வர் முகஸ்டாலின் NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என விளக்கமும் அளித்திருந்தார்கள். இந்த சூழலில், திடீரென நேற்று தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைத்தள பக்கங்களில் திமுக எம்.பி.க்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் நிறுவுவதற்கான தமிழ்நாட்டின் ஒப்புதல் குறித்து நாடாளுமன்றத்தில் நான் தவறான தகவல் நான் அளித்ததாக குற்றம் சாட்டி இருந்தார்கள்.

ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் மீது எனக்கு உடன் பாடு இல்லை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், நான் நாடாளுமன்றத்தில் கூறியதில் உறுதியாக நிற்கிறேன். கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் கடிதத்தை கொண்டு வந்து இருக்கிறேன்” என கூறி அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” தர்மேந்திர பிரதான் நீங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.தமிழ்நாடு தொடர்ந்து NEP 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளது.

நாங்கள் கடந்த மார்ச் 15ம் தேதி எழுதிய அந்த கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை. இதற்காக தனியாக குழு ஒன்று அமைக்கப்படும் அந்த குழு விசாரித்து முடித்த பிறகு அதனைப்பற்றி பேசலாம் என்று தான் சொன்னோம்.  மற்றபடி எங்களுடைய முடிவிலும் நாங்கள் மாற்றமில்லாமல் தான் இருக்கிறோம்.

NEP-ஐ கட்டாயமாக்க நினைப்பவர்களும், தமிழகத்தின் கல்வி மரபையும் பண்பாட்டையும் மாற்ற நினைப்பவர்களும் அரசியல்க்களத்தில் தான் விளையாடுகிறார்கள்.தமிழகத்திற்கு சிறந்த கல்வி முறையை தமிழகமே தேர்வு செய்ய உரிமை உள்ளது என்பதை ஏற்று ஆதரித்தால், தமிழகத்தின் மாணவர்கள் மற்றும் எதிர்காலத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்” எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்