தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுவரை அதிமுக சார்பில் நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டில் பாமகவிற்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஜி.கே வாசனிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்த நிலையில், மீண்டும் இன்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியை சந்தித்து தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…