பாஜகவுடன் தமாகா கூட்டணி – ஜி.கே வாசன் அறிவிப்பு..!
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஜி.கே வாசனை பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசி இருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஜி.கே வாசன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன்” வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்க அரவிந்த் மேனன் அழைப்பு விடுத்தார்.
பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்” என கூறினார். இதனால் தமிழ்நாட்டில் வருகின்ற மக்களவை தேர்தலில் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.