மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து -டி.எம்.கிருஷ்ணா வழக்கு..!

Default Image
  • சமூக வலைதளங்களுக்காண மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.
  • எம் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க  உத்தரவு.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, சமூக ஊடகங்களுக்கான புதிய ஒழுங்கு விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. மேலும், இந்த புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இந்த காலஅவகாசமானது கடந்த மே 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சமூக வலைதளங்களுக்காண மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்துரிமை, தனியுரிமை ஆகியவை விருப்பப்படி சுதந்திரமாக, கண்ணியத்துடன் கிடைக்க வேண்டும். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தை தணிக்கை செய்யும் விதமாக புதிய விதிகள் உள்ளன. விருப்பப்படி கிடைக்கும் போதுதான் தன்னைப்போன்ற ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாக உணர முடியும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு முரணாக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்தார்.

இதனால், இந்த விதிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என டி.எம் கிருஷ்ணா தெரிவித்தார். இந்நிலையில், டி.எம் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களுக்கு புதிய விதிகள்:

  • ஒவ்வொரு சமூக வலைத்தள நிறுவனமும் மாதம் ஒரு முறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
  • குறை தீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூக வலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.  அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும்.
  • ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவேண்டும்.
  • புகார்கள் தொடர்பாக 36 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தவறான தகவலை பரப்ப கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும் போது கண்டிப்பாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்