திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நாட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணியில் அரசும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே உதவிகள் கிடைக்கவில்லை என்று பல்வேறு பகுதிகளில் மக்கள் கோபமும் கொண்டுள்ளனர்.இதன் பின் புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் இன்றுடன் இந்த உத்தரவு முடியும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நாளையும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…