திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும்…!மு.க.ஸ்டாலின்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்ததும் ஜனவரி 4 ஆம் தேதி வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் .ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை. சட்டத்துறை அமைச்சரே கூறியதால் சொல்கிறேன், சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உண்மை வெளிவராது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.