திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:
திருவாரூர் தொகுதியில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கஜா புயல் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தின. இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம் கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது . கஜா புயல் பாதிப்புகள் இருப்பதால் வருகின்ற ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் திருவாரூரில் சுமூக நிலை திரும்பியவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு:
இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியது.அதேபோல் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு, ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி தலைவர்கள் கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு:
பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…