திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :
பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.அதில் திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாக, இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மதியம் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வரும்படி அழைப்பு விடுத்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ்.
இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…