திருவாரூர் இடைத்தேர்தல்: வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்…!தினகரன்
திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை தஞ்சாவூரில் அறிவிக்கப்படுவார். திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை செய்யப்பட்டது.இடைத்தேர்தல் நடத்தினால் தான் மக்கள் யார் பக்கம் என்பது தெரிய வரும்.
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம்.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டி என்று அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.