திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

இன்று திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீப திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 3:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது கோயிலுக்குள் 3,000 – 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயிலுக்குள் 6,000 – 7,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. May I Help You என்ற 50 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 2,700 சிறப்பு பேருந்துகளும், புறவழிச்சாலையிலிருந்து 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்