திருவண்ணாமலை நிலச்சரிவு : இருவரின் சடலம் மீட்பு! 

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட 7 பேரில் 2 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Tiruvannamalai Landslide

திருவண்ணாமலை : நேற்று கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் இதுவரை 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர். இவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தேசிய மீட்பு படையினர் நேற்றிலிருந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, வெளியான தகவலின்படி, புதையுண்டதில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. மீதம் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்